Saturday, November 23, 2013

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான், கடவுளைச் சந்திக்க வேண்டும்! என்றான்.

அவர் ‘பளார் என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.

இவன் பயந்து ஓடிப் போனான்....

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!

‘‘அப்படியா?

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!
சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.

தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க
நமது வாழ்கையில் எது உண்மை என்பதை ஆராய்வது மிகவும் முக்கியம் :-

வாழ்கையில் மனிதனுக்கு எது உண்மையான சந்தோசம்

உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சந்தோசத்தை அனுபவிக்கிறான் . சந்தோசத்தின் பரிமாணத்தை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெவ்வேறு கோணத்தில் சந்திக்கிறான் . ஒருவன் அமைதியில் சந்தோசத்தை காண்கிறான் , இன்னொருவன் நல்ல உறவுகளையும், நண்பர்களையும் பெற்றதில் சந்தோசம் அடைகிறான் , மற்றொருவன் ஒவ்வொரு செயலிலும் வெற்றி காணும் போது சந்தோசம் பெறுகிறான் . ஆனால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சந்தோசத்தை வெவ்வேறு விதமாக அனுபவித்தாலும் , இந்த சந்தோசமானது மனிதனுக்கு புதிய தெம்பைக் கொடுக்கிறது . இன்பமயமான சூழ்நிலையை உருவாக்குகிறது , உறவுகளை பலப்படுத்துகிறது . ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை எந்த நோக்கத்தோடு புரிந்து கொள்கிறான் என்பது மிகவும் முக்கியம் .

வாழ்க்கை என்றால் அதனோடு சந்தோசத்தையும் இணைத்து பேசப்படுகிறது . வாழ்க்கையின் சந்தோசம் ஆத்மா சந்தோசம் என்றும் , வெளிப்படையான சந்தோசம் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது . ஒவ்வொரு மனிதனும் அவனது முழுமையான வாழ்க்கையில் இந்த இரண்டு வகையான சந்தோசங்களை அனுபவிக்கிறான் . மனிதன் இளவயதிலே பெரிய பதவியை வகிக்கிறான் , அதிக செல்வத்தை சம்பாதிக்கிறான் , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறான் .

அந்த சின்ன வயதில் ஒளிமயமான பல வண்ணங்களுடைய வாழ்க்கை மனிதனுக்கு சந்தோசத்தை தருகிறது . அப்போது அவன் சந்தோசத்தை குறுகிய நோக்கத்தோடு பார்க்கிறான். அந்த இளவயதானது சந்தோசத்தை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்து ரசிக்கிறது . அந்த வயதில் மனிதன் அவனுடைய சந்தோசத்தை மட்டும் தான் சிந்திக்கிறான். மேலும் மனிதனின் எண்ணங்களும் அவனைப் பற்றி தான் சிந்திக்கிறது . தான் என்ற எண்ணம் கொண்டு வாழும் மனிதனின் வாழ்க்கையில் சந்தோசம் நிலைத்து இருப்பதில்லை . பொன், பொருள் , பதவி , கௌரவம், ஆடம்பரம் , ஆணவம் ஆகிய அனைத்திலும் சந்தோசத்தை காணும் மனிதனுடைய வாழ்க்கை வெறும் வெத்து வெட்டான வாழ்க்கைக்கு சமமாகும் . இதனை வெளிப்படையான சந்தோசம் என்று சொல்லலாம் . இந்த வெளிப்படையான சந்தோசம் மனிதனுக்கு ஒரு போதும் நிலைப்பதில்லை . இந்த தத்துவத்தை மனிதன் கடைசி காலத்தில் அறிந்து கொள்கிறான் . அதுவரை இந்த பகட்டான வாழ்க்கை மனிதனை படாதபாடு படுத்தி விடுகிறது . அந்த சமயத்தில் மனிதன் பள்ளம் மேடு , ஏற்றத் தாழ்வு , உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வாழ்க்கையினுடைய பல்வேறு பரிமாணங்களை அனுபவிக்கிறான் . மனிதன் வாழ்க்கையில் பல சம்பவங்களை சந்திக்கிறான் . அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கு ஒவ்வொரு பாடத்தை கற்பிக்கிறது .

அவன் வாழ்க்கையில் பலமுறை விழுந்து எழுகிறான் . ஒவ்வொரு விழுதலும் அவனுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருகிறது . இந்த மாற்றம் அவனுடைய மனதை பக்குவப்படுத்துகிறது . அவனுடைய பகுத்தறிவை வளரச் செய்கிறது . இந்த மாற்றமானது மனிதனுடைய எண்ணத்தை மாற்றி அமைக்கிறது . மனிதனுக்கு வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன . அவனுடைய ஒவ்வொரு எண்ணமும் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்தை நிகழச் செய்கிறது. இந்த சம்பவமானது அவனை ஆக்கப்பூர்வமான செயலை செயல்படுத்த வைக்கிறது . இந்த மாற்றமானது மனிதனை தனக்கு மட்டும் எண்ணாமல் மொத்த சமூகத்தை பற்றி எண்ணவைக்கிறது.

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலிருந்து கிடைக்கும் நல்ல பலன்களை மனிதன் சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிறான் .
இந்த மாற்றம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது . அவன் அனைத்தையும் பரந்த நோக்கத்தோடு அணுகுகிறான் . மனிதன் சமூகத்தை பற்றி அக்கறை எடுத்துக் கொள்கிறான் . அப்போது மனிதன் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் சமூகத்தின் நலத்தை பெரிதும் கருதுகிறான் . மனிதன் சமூகத்தின் வளர்ச்சியை கண்டு சந்தோசம் பெறுகிறான் . தனக்கு கிடைத்த சந்தோசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறான் . தனக்குள்ளே ஏற்படும் மாற்றத்தின் வழியாக புதிய சமூகத்தை படைக்கிறான் . வளமான சமுதாயம் மக்களின் வாழ்க்கையை மலரச் செய்கிறது . மனிதனுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது . மனிதன் சமூகத்தை நேசிக்க தொடங்குகிறான் . இந்த மாற்றம் அன்பு, பாசம் , கருணை , பண்பு ஆகிய தன்மைகளை மனிதனுக்கு வரமாக அளிக்கிறது . அவனுக்குள்ளே தன்னம்பிக்கை பிறக்கிறது . இந்த மாற்றம் மனிதனை மனிதனாக வைக்கிறது . இந்த மாற்றம் மனிதனுக்கு ஆத்மா சந்தோசத்தை கொடுக்கிறது .

மனிதன் எந்த வயதிலும் சந்தோசத்தை பெறுகிறான் , எந்த நேரத்திலும் சந்தோசத்தை அடைகிறான் . இதற்கு வயது வரம்பில்லை , காலம் தடையில்லை . மனிதன் இந்த ஆத்மதிருப்தியை உணர்கிறான் , அனுபவிக்கிறான் . மனிதன் அனுபவிக்கும் ஆத்மதிருப்தி தான் வாழ்க்கையில் உண்மையான சந்தோசம் . இந்த சந்தோசத்தை பற்றி மனிதனுக்கு எந்த மொழியாலும் புரிய வைக்க முடியாது . இதை மனிதன் உணரத் தான் முடியும் . எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றும் அறிவேன் பராபரமே என்ற கருத்தைக் கொண்டு வாழும் மனிதன் விலைமதிக்க முடியாத உண்மையான சந்தோசத்தை அடைகிறான் .
ராஐ யோகங்கள் தரும் சனீஸ்வர பகவான். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்தி...ற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன. சாக்கடையில் பதுங்கிய இந்திரன் ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார். ‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது. சனீஸ்வரரின் அதிகாரம் எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் திசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன், கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும் ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார். நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், ‘சனியனே! உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுது’ என்று சொல்லி திட்டுவார்கள். உன்னை புதன் பிடித்து ஆட்டுகிறது. கேது ஆட்டுவிக்கிறான் என்று யாரும் சொல்வதில்லை. எந்த கிரக திசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் நம்மிடையே தவறாக ஏற்பட்டு விட்டது. இப்படி சர்வ வல்லமை பெற்ற சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. அந்த வகையில் சனிபகவான் தன் உச்ச ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். தற்போது 2012-ம் ஆண்டு முதல் சனி தன் உச்ச வீடான துலா ராசியில் அமர்ந்துள்ளார். ஆகையால் பூரண பலத்துடன் திகழ்கிறார். இதனால் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த உச்ச சனியால் சகல யோக அதிர்ஷ்டங்கள், சுப விசேஷங்கள் கூடிவரும். யோக பாக்யத்தை அருள்வார். மற்ற ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள், நிறை, குறைகள், கஷ்ட-நஷ்டங்கள் இருந்தாலும் உச்ச பலம் காரணமாக சில சாதகமான பலன்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி திசை நடப்பவர்களுக்கு இந்த உச்ச நேரம் மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும்.
சபரிமலைக்கு, வீட்டிலிருந்து கிளம்பும்போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பிப் பார்க்காமல் கிளம்ப வேண்டும். பக்தன் தனது ஆன்மாவை இறைவனிடமே முழுமையாக சமர்ப்பித்திருக்கிறான். ஐயப்பனுடன் ஒன்றியிருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"

ஸ்ரீ சந்த்ரமௌலீச்வரருக்கு தினமும் ஸ்ரீருத்ர த்ரிசதீ அர்ச்சனைக்கு நிறைய வில்வம் எடுத்து அர்ச்சனை செய்வார். வாடாத, பூச்சி அரிக்காத, மூன்று இலைகளோடு கூடிய வில்வதளங்கள் மட்டுமே பூஜைக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

ஒருமுறை காஞ்சிபுரத்தில் பூஜைக்கான வில்வம் கிடைப்பதே மிகவும் அரிதாகப் போனது. சிவன் கோவில்களில் வில்வ மரம் இருந்தாலும், அது சிவ சொத்தாச்சே! அதை எடுப்பதே மஹா பாபம்! அதை பூஜைக்கு மறுபடியும் உபயோகப்படுத்துவது என்றால்??? இதை எப்படியாவது பெரியவாளிடம் தெரியப்படுத்தணும் என்று ஒரு பாரிஷதர் மெல்லப் பேச்சை ஆரம்பித்தார்....

"காஞ்சிபுரத்ல வரவர வில்வ மரங்கள்ள வெறும் கெளைதான் இருக்கு...பச்சு பச்சுன்னு எலையே காணோம்!..."

"ஹிந்தி பண்டிட்டைக் கேளேன்!.."

"ஆமா...ஹிந்தி பண்டிட் என்ன சர்வக்ஞ்யரா என்ன? அவருக்கு ஹிந்தி, சம்ஸ்ருதம், இங்க்லீஷ்,தமிழ் தெரியும். வில்வமரம் தெரியுமா என்ன?.." உள்ளுக்குள் அலுத்துக் கொண்டார். பெரியவா ஆக்ஞை! மீறமுடியுமா? பண்டிட்டிடம் போனார்.

"பண்டிட் ஸ்வாமி....காஞ்சிபுரத்ல வீடுகளைத் தவிர, வேற எங்கியாவுது வில்வமரம் இருக்கான்னு தெரியுமா? ஒங்களைக் கேக்கச் சொல்லி பெரியவா உத்தரவு.."

ஹிந்தி பண்டிட்டுக்கு ஹ்ருதயமும், மேனியும் சிலிர்த்தது! காரணம்?

பத்து நாட்களுக்கு முன், இவர் ஒரு முனிசிபல் பார்க்கில் அமர்ந்து கொண்டு ஒரு முஸ்லீம் ஆசிரியருக்கு ஹிந்தி டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பார்க் என்றால் நம் ஊரில், கவனிக்கப்படாமல், காய்ந்து போன ஒன்றிரண்டு செடிகளைத் தவிர, வெறும் குப்பையும் கூளமுமாகத்தானே இருக்கும்? இதுவும் அப்படித்தான் இருந்தது. ஆனால், அவர் பார்வையில் "பளிச்'சென்று பச்சைப்பசேலென்று அந்த வில்வமரம் பட்டது!

"அட! பார்க்ல வில்வமரம் கூட வளக்கறாளா என்ன?..." என்ற நொடிப்பொழுது சிந்தனை அப்போதே மறைந்தது. இப்போது பாரிஷதரின் கேள்வி அந்த சிந்தனையை ஆழத்திலிருந்து ஆச்சர்யமாக மாற்றியது.

"வா.....என்னோட! காட்றேன்.." என்று பார்க்கில் உள்ள வில்வமரத்தைக் காட்டினார். அப்புறம் வெகு நாட்களுக்கு அந்த மரத்தின் வில்வதளங்கள்தான் பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருடைய மகள் அவரிடம் "ஏம்ப்பா...யாரோட கண்ணுலயும் படாத எடத்ல வில்வமரம் இருக்கறது, ஒங்களுக்கு மட்டும் தெரியும்ன்னு, பெரியவாளுக்கு எப்டி தெரிஞ்சுது?.." கேட்டாள்.

"பெரியவாளோட பல லீலைகள்ள இதுவும் ஒண்ணு...."

"இதுல லீலைக்கு என்னப்பா இருக்கு? ஒங்களுக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இருக்கா; நெறைய எடங்களுக்குப் போறேள்; சிவபூஜை பண்றேள்; அதுனால வில்வமரம் எங்கியாவது இடுக்குல இருந்தாக் கூட ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்க சான்ஸ் ஜாஸ்திங்கற அனுமானத்ல பெரியவா அப்டி சொல்லியிருக்கலாம் இல்லியா?.."

"இல்லம்மா.....இது ஒரு அபூர்வ ஸித்தி!.."

"அப்டீன்னா...பார்க்ல வில்வமரம் இருக்குன்னு பெரியவாளே சொல்லியிருக்கலாமே? ஒங்களை எதுக்குக் கேக்கச் சொன்னா..?"

"பாரும்மா....முனிசிபல் பார்க் மட்டுமில்லே; இந்த அண்டகோளமே பெரியவாளோட அறிவுக்கு உட்பட்டதுதான்! இந்த அமானுஷ்ய சக்தியை மத்தவா புரிஞ்சுக்க முடியாதபடி மறைச்சு வெச்சு, ரொம்ப சாமான்யராட்டம் இருக்கறதுனாலதான் பெரியவாளுக்கு பெருமை! [இது அத்தனை மஹான்களுக்கும், அவதார புருஷர்களுக்கும் மட்டுமே உரித்தான கல்யாண குணம்]

முனிசிபல் பார்க்ல வில்வமரம் இருக்குன்னு சிஷ்யாகிட்ட சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும்? சிஷ்யர் தண்டோரா கொறையா, பாக்கறவா அத்தனை பேர்கிட்டயும் "முனிசிபல் பார்க் பக்கம் எட்டிக் கூட பாக்காதா பெரியவாளுக்கு, அங்க வில்வமரம் இருக்குன்னு தெரிஞ்சிருக்கு பாத்தேளா! பெரியவா எப்பேர்ப்பட்ட ஒரு ஸித்தபுருஷர்!"..ன்னு மொழக்கம் போட்டுருப்பார்.

அதை தவிர்க்கறதுக்காக, என்னை ஒரு வ்யாஜமா [காரணமா] காட்டி, எம்மூலமா வரட்டுமேன்னு எனக்கு கௌரவம் குடுத்து, என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டுட்டு, தன்னை இந்த சம்பவத்துலேர்ந்து சுத்தமா மறைச்சுண்டுட்டார் பாத்தியா?..." கண்களில் கண்ணீரோடு அப்பாவும் மகளும் பெரியவாளின் லீலையை ரசித்தனர்.
-------------------------------------------------------------------

நாம் நம் ஊனக் கண்களால் மட்டுமே பார்க்கிற, பார்க்க முடிந்த இந்த உலகத்தில், எந்த ஒரு காரியமும், காரணம் இல்லாமல் நடக்காது. இதில் எந்த ஆதாரமுமோ, இருப்போ இல்லாத "நான், நான், என்னுடையது" என்று ஒன்று பெரிய பூதமாக கிளம்பி அத்தனை அனர்த்தத்துக்கும் காரணமாகிறதே!